Site icon அநேகன்

சிலாங்கூர் மைபிபிபி உதவி தலைவராக டாக்டர் சுரேந்திரன் நியமனம்!

கிளானா ஜெயா, மார்ச் 8-

சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவி தலைவராக டாக்டர் எம்.சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலு லங்காட் மைபிபிபி தொகுதித் தலைவரான டாக்டர் எம்.சுரேந்திரனை சிலாங்கூர் மாநில உதவி தலைவராக இம்மாநில தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி நியமித்துள்ளார்.

தொகுதி நிலையில் சுரேந்திரன் ஆற்றி வரும் சேவைக்காக அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறியப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில மைபிபிபி கூட்டத்தில் மாநில தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி சுரேந்திரனை இப்பதவிக்கு நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை இப்பதவிக்கு நியமனம் செய்துள்ள சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோக பாலா ஆகியோருக்கு சுரேந்திரன் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version