Site icon அநேகன்

செந்தோசா சட்டமன்ற தொகுதியின் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்: 300 பேர் பங்கேற்பு

கிள்ளான், மார்ச் 10-

பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்தார்.

தேசிய புற்றுநோய் கழகம் மற்றும் சொக்கா காக்காய் மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கிள்ளான் ஜெயா சொக்கா காக்காய் சிலாங்கூர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 13 முதல் 70 வயது வரையிலான 300 பேர் பங்கேற்றனர்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியத்தை இளம் பெண்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார்.

பெண்களில் 41 விழுக்காட்டினர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்ட பின்னரே இந்நோயின் கடுமையை உணர்கின்றனர்.

இதனைத் தடுக்க இதற்கான தடுப்பூசியை முன்கூட்டியே போட்டுக் கொள்ள வேண்டும் என்று இங்கு எச்பிவி தடுப்பூசி திட்டத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

உலக மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்தில் இளம் பெண்கள் கலந்து கொண்டது இந்நோய் குறித்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் எச்பிவி தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டதால் இந்த வாய்ப்பை இந்திய பெண்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் குணராஜ்ஜின் சிறப்பு அதிகாரி டாக்டர் உமா ராணி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version