Site icon அநேகன்

கெர்லிங் குருகுல & மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களுக்கு பள்ளிச் சீரூடைகள் அன்பளிப்பு!

கோல குபுபாரு, மார்ச் 10-

2024/25-ஆம் கல்வி ஆண்டு நாளை தொடங்கவிருக்கும் நிலையில் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இயங்கிவரும் குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மைகீத்தா சூரியன் ஆசிரமத்தைச் சேர்ந்த இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிச் சீருடைகளும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

‘ஆர்ச்டியோசேசன் ஆஃப் கோலாலம்பூர் கிரியேஷன் ஜஸ்திஸ் மினிஸ்டிரி’ என்ற தேவாலயத்தின் சார்பில் பாதர் ஜூலியன் லியோவ் மற்றும் அண்ட்ரூ மாணிக்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் சுபாங் ஜெயா மைடின் பேரங்காடியில் 37 மாணவர்களை நேரில் வரவழைத்து பள்ளிச் சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன.

தரமான உடைகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் வாரியத் துணைத் தலைவர் திரு. கனகராஜா தலைமையில் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.

இறுதியில் எல்லா மாணவர்களுக்கும் துரித உணவு வகைகளான கேஎஃப்சி & மெக்டோனால் வாங்கித் தரப்பட்டன. இது இவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவர்களுக்குத் தேவையான பள்ளிச் சீருடைகளையும் உபகரணங்களையும் பரிசளித்து உணவும் கொடுத்து ஆசீர்வதித்த பாதர் ஜூலியன் லியோவ் மற்றும் அண்ட்ரூ மாணிக்கம் ஆகியோருக்கு கெர்லிங் தமிழ்ப்பள்ளி வாரிய உறுப்பினர்களும் தலைமை ஆசிரியர் திரு. குமார் சிதம்பரமும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version