கோலாலம்பூர், மார்ச் 11-
இங்குள்ள செராஸ், ஸ்ரீ ஜோகூர் வட்டார மக்களுக்கு வசதியாக நியாயமான விலையில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது ‘வெஸ்டர்ன் பனானா லா’ உணவகம்.
இந்த உணவகத்தில் மேற்கத்திய உணவு வகைகளோடு மலாய் , இந்திய உணவு வகைகளும் ஏற்புடைய விலையில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று இந்த உணவகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி தலைவர் டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்தார்.
“சுற்று வட்டார மக்களின் வாழ்க்கை நிலையைக் கருத்திற் கொண்டு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு மனநிறைவு கொள்ளலாம்” என்றார் பிரதமரின் அரசியல் செயலாளருமான அஸ்மான்.
இந்த உணவக திறப்பு விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 50 பேருக்கு உணவு பொருட்களும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த உணவக திறப்பு விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்பட்டதாக இதன் உரிமையாளரான ஜோனாதன் வேலா குறிப்பிட்டார்.
