Site icon அநேகன்

சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மார்ச் 12-

தலைநகர் சுங்கை பீசி தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ‘இலக்கை நோக்கி ஓர் இரவு’ எனும் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் 23 ஆம் தேதி இரவு மணி 7.00க்கு சுங்கை பீசி வோங் ஹோன் சீனப்பள்ளியில் நடைபெறும்..

விருந்துடன் கூடிய இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டின் விலை ஒரு நபருக்கு 100 வெள்ளியாகும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வநாதன் தெரிவித்தார்.

பள்ளி மேம்பாடு, உபகரணங்கள், மாணவர்கள் மேம்பாட்டு திட்டங்கள் போன்றவற்றிற்காக இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியைத் தாங்கள் ஏற்பாடு செய்வதாகவும் இந்நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார மக்களின் ஆதரவைத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் செல்வநாதன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரங்களுக்கு செல்வநாதன் (010-2755821), துணைத் தலைவர் ரூபன் (014-3635471), உறுப்பினர் ஆனந்தா (014-6677655) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version