Site icon அநேகன்

‘ராகாவில் சிரி சிரி சிரி’ வானொலி போட்டி: வெ.15,000 ரொக்கப் பரிசில் உங்கள் பங்கை வெல்லுங்கள்!

கோலாலம்பூர், மார்ச் 13-

‘ராகாவில் சிரி சிரி சிரி’ போட்டியைப் பற்றிய சில விபரங்களைக் காணலாம்.

• முதல் முறையாக நகைச்சுவைத் துணுக்குகளை இடம்பெறச் செய்யும் ‘ராகாவில் சிரி சிரி சிரி’ வானொலி போட்டியில் பங்கேற்று 15,000 வெள்ளி ரொக்கப் பரிசில் தங்கள் பங்கை வெல்லும் அரிய வாய்ப்பை இப்போது முதல் மார்ச் 29 வரை ராகாவின் ரசிகர்கள் பெறலாம்.


• வானொலி அல்லது ‘SYOK’ செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் குறிப்பிட்ட அழைப்புக்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் போட்டியில் பங்கேற்க முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.


• அறிவிப்பாளர் ஒலியேற்றிய நகைச்சுவைத் துணுக்கைப் பங்கேற்பாளர் கேட்பார். பின்னர், அந்நகைச்சுவைத் துணுக்கைச் சார்ந்த ஒரு கேள்வியை அறிவிப்பாளர் பங்கேற்பாளரிடம் கேட்பார்.


• பத்து வினாடிகளுக்குள் சரியான பதிலைக் கூறும் பங்கேற்பாளர் 200 வெள்ளி ரொக்கப் பரிசைத் தட்டிச் செல்வார். இருப்பினும், கொடுக்கப்பட்ட பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தச் சுற்றுக்குப் பனிப்பந்தாகும்.


• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Exit mobile version