Site icon அநேகன்

இல்லத்தரசிகளின் சமூக பாதுகாப்பு குழு தலைவராக கஸ்தூரி பட்டு நியமனம்!

கோலாலம்பூர், மார்ச் 15-

முன்னாள் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவை சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்பு குழு தலைவராக மனித வள அமைச்சர் ஸ்டீபன் சிம் நியமித்துள்ளார்.

 பெண்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும்  நடத்திய போராட்டத்தின் வழி பெற்ற அனுபவம் இந்தக் குழுவை இவர் திறம்பட வழிநடத்துவதற்கு உதவும் என்று ஸ்டீவன் சிம் நம்பிக்கைத் தெரிவித்தார். 

குடும்ப வன்முறை, குடியுரிமை இல்லாத பிள்ளைகள், சரிவிகித சம்பளம், கற்பழிப்புச் சம்பவங்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் போன்றவவற்றிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் பரந்த அனுபவம் கொண்டவர் கஸ்தூரி பட்டு.

இதன் அடிப்படையில் இவரை இந்தப் பதவிக்குத் தாம் நியமிப்பதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

Exit mobile version