Site icon அநேகன்

காஞ்சனா 3 படத்தின் கதாநாயகி ஓவியா ?

சென்னை, செப்.29 –

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகா்கள் மனதில் இடம் பிடித்த ஓவியா ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

களவானி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான ஓவியா கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாா். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஒழுக்கமான வாழ்க்கை முறை மூலம் பெருமளவு ரசிகா்கள் மத்தியில் அன்புக்குாியவராக இடம் பெற்றாா்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னா் ஓவியா அந்த படத்தில் நடிக்கவுள்ளாா், இந்த படத்தில் நடிக்க உள்ளாா் என பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும் அவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா நடிக்க இருக்கிறாராம். தற்போது ஓவியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version