Site icon அநேகன்

13 வயதிற்குக் குறைவான சிறார்களுக்கு சமூக வலைத்தள கணக்குகள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவீர்! -பாமி பாட்சில்

கோலாலம்பூர் ஏப்.22-

தங்களின் பதின்மூன்று வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக வலைத்தள கணக்குகள் இல்லாதிருப்பதைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் 13 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்கள் எந்த சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவது பொருத்தமில்லாதது என்று தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) கண்டுபிடித்துள்ளதாக தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்.

பெரும்பாலான சமூக வலைதளங்கள் இந்த வயதைச் சேர்ந்த சிறார்கள் கணக்குகளைக் கொண்டிருக்க முடியாது என்ற நிபந்தனையை கொண்டிருக்கின்றன.

“இதன் அடிப்படையில் 13 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்கள் டிக் டாக், முகநூல், இன்ஸ்தாகிராம் அல்லது எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்குக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று ஆணையத்தின் சார்பாக நான் எச்சரிக்கிறேன்’ என்றார்.

‘இவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகளைக் கொண்டிருந்தால் பெற்றோர்கள் ஆணையத்திடம் தெரியப்படுத்தலாம். அந்த கணக்கை நாம் முடக்கி விடுவோம் என்று 2024க்கான லெம்பா பந்தாய் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய போது அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான பாமி பாட்சில் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

Exit mobile version