கோலாலம்பூர், ஏப்.25 –
ஆஸ்ட்ரோ தனது பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் சிறந்த 7 இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களை அறிவித்தது.
பெர்ம சந்திரா, ரூஹன், திவ்யா, நித்தியன், நேசன், யாசஸ்கரன், மற்றும் யோஷினி உள்ளிட்டச் சிறந்த 7 இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள் முதல் நிலை வெற்றியாளராகத் திகழ்வதற்குப் போராடுவதால், சிறந்த இசை மற்றும் உற்சாகம் நிறைந்த ஒரு மறக்க முடியாத இரவாக இருக்கும் என்பதை மாபெரும் இறுதிச் சுற்று உறுதியளிக்கிறது.
புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களான செயின்ட் டிஎப்சி மற்றும் விக்கி ஆகியோரால் தொகுத்து வழங்கப்படும் இப்போட்டியின் இறுதிச் சுற்றில் மிகவும் தீவிரமான போட்டிக்குப் போட்டியாளர்கள் தயாராகும் வண்ணம் அவர்களின் பாடும் திறனைக் கூர்மைப்படுத்தப், புகழ்பெற்ற உள்ளூர் இசையமைப்பாளர் ஜெய் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்.
மேலும், டாக்டர் பர்ன் மற்றும் பிரீத்தா பிரசாத் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உள்ளூர் பாடகர்களுடன் நடுவராகப் புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர், மனோ இணைவார்.
குக்கூ நிதி ஆதரவாளராக திகழும் இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதோடு குக்கூ தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:
முதல் நிலை வெற்றியாளர்: ரிம50,000, குக்கூ கிராண்டே நீர் சுத்திகரிப்பான் (Cuckoo Grande Water Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அரிய வாய்ப்பு;
இரண்டாம் நிலை வெற்றியாளர்: ரிம25,000, குக்கூ யு மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo U Model Air Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அறிய வாய்ப்பு;
மூன்றாம் நிலை வெற்றியாளர்: ரிம10,000 மற்றும் குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர் (Cuckoo P10 Pressure Multi-Cooker);
மிகவும் பிரபலமானவர் விருது: ரிம10,000 மற்றும் குக்கூ கே மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo K Model Air Purifier); மற்றும்
ஆறுதல் பரிசுகள்:
இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 2): ஒவ்வொருவருக்கும் தலா ரிம5,000; மற்றும்
இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 1): ஒவ்வொருவருக்கும் தலா ரிம3,000
உங்களின் விருப்பமானப் போட்டியாளரின் வெற்றியைக் கொண்டாட 28 ஏப்ரல் 2024, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் இறுதி அத்தியாயத்தைக் காணத் தவறாதீர்கள். பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் அத்தியாயங்களைக் கண்டு மகிழ இப்போதே ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பின் சந்தாதாரராகுங்கள். பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astroulagam.com.my/BigStageTamilS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

