Site icon அநேகன்

மலேசிய ரசிகர்களை வசீகரிக்கச் செய்யும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மே 1-

மலேசியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஸ்டார் பிளானெட் ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் உலகத்தரம் வாய்ந்த நேரலை இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் ஜூலை 27ஆம் தேதி இரவு 8 மணியளவில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தலைநகர் லீ மெரிடியன் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இன் மீதான செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆலன் ஃபூ மற்றும் ஸ்டார் பிளானட்டின் இயக்குநர் டத்தோ ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் சிறந்த தலைமைத்துவம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் திறன்மிக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான செந்தில் வேலவனும் கலந்துகொண்டார். இவரின் அனுபவம் கச்சேரியின் கலைப் பார்வையை குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தும் என்று கூறப்பட்டது.

இச்செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் ரஹ்மானியாக் மலேசியா ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பங்கேற்றனர்.

“இசைத்துறையின் உண்மையான அடையாளமான ஏ.ஆர்.ரஹ்மானை மலேசியாவிற்கு அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்” என ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குனர் டத்தோ ஆலன் ஃபூ தெரிவித்தார்.

“மலேசிய ரசிகர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் பணியைத் தொடரும் இந்த இசை நிகழ்ச்சி ஸ்டார் பிளானட்டின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. ரஹ்மானின் இசை எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொடக்கூடியது. மேலும் ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட படைப்புகளை நேரலையில் காணும் இந்த அரிய வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

“ஸ்டார் பிளானட் ஏற்பாடு செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இன் கோலாலம்பூர் 2024 இசை நிகழ்ச்சியானது, புதிய இசையமைப்புடன் ரஹ்மானின் பிரசித்தி பெற்ற தனித்துவமான வெற்றிப் பாடல்களை உள்ளடக்கிய நட்சத்திரக் கலைஞர்களால் உயிரூட்டப்பட்ட இசை வகைகளின் அற்புதமான கலவையைக் காண்பிக்கும். இந்திய சினிமாவில் ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்களின் விளக்கங்கள், மெல்லிசை உட்பட நல்ல அனுபவத்தை ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்” என ஸ்டார் பிளானட்டின் இயக்குநர் டத்தோ ஆர். ராஜேந்திரன் தெரிவித்தார்.

“இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை நன்கு ஈர்க்கும் என நாங்கள் நம்புகிறோம். இது பொழுதுபோக்கு நாள்காட்டியில் ஒரு சிறப்பு அம்சமாக குறிக்கப்படுகிறது. மேலும், இந்த பிரம்மாண்ட இசை அனுபவத்தில் பங்கேற்க பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்து வருவதால், உள்நாட்டுப் பயணங்களும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என டத்தோ ஆலன் தெரிவித்தார்.

காலத்தால் அழியாத எண்ணற்ற மெல்லிசை மற்றும் பூமியை அதிரச் செய்யும் வன் இசையை உருவாக்கியவரான மெஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் மலேசிய இசை நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத ஓர் அற்புதமான படைப்பை வழங்கவுள்ளார். இசைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுழன்று வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பங்களிப்பிற்காக உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளார் என்பதோடு, அகாடமி விருதுகள், கிராமிய விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் உள்ளிட்ட மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து, மேடையை அலங்கரிக்கவிருக்கின்றனர். அதிநவீன, சர்வதேச தரத்திலான ஆடியோ-விஷுவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு கணத்தையும் ஒளிரச் செய்வதன் மூலம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, உணர்வுகளைத் தூண்டும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மே 8 ஆம் தேதி மதியம் 2:00 மணி தொடங்கி my.bookmyshow.com மற்றும் ticket2U.com.my வழியாக கிடைக்கும். டிக்கெட்டுகளின் விலை வெ.98 முதல் கிடைக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசை நிகழ்ச்சியைத் தவறவிடாமல் இருக்க ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விரைவில் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல் மற்றும் டிக்கெட் விவரங்களுக்கு, www.starplanet.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும்.

ஸ்டார் பிளானட் பற்றி:
2002இல் நிறுவப்பட்ட ஸ்டார் பிளானட், மலேசியாவின் முதன்மையான பொழுதுபோக்கு நிறுவனமாக விளங்குகிறது, இது உலகத்தரம் வாய்ந்த நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குகிறது. தனித்துவமான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதில் இது வரையில் எந்த ஒரு குறைகளுமின்றி நிகழ்ச்சிகள் படைத்து சாதனைக்கு பெயர் பெற்ற ஸ்டார் பிளானட் நிறுவனம் மலேசிய பொழுதுபோக்கு உலகில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோலை அமைத்திருக்கிறது. எங்களின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் படைத்த பதிவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களான லியோனல் ரிச்சி, மைக்கேல் லேர்ன்ஸ் டு ராக், ஏர் சப்ளை, ஆலன் வாக்கர் மற்றும் எக்சோ, சூப்பர் ஜூனியர் மற்றும் என்சிடி ட்ரீம் உள்ளிட்ட கே-பாப் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டார் பிளானட் பல ஆண்டுகளாகப் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இதில் மதிப்புமிக்க “சிறந்த இசை நிகழ்ச்சி படைப்பாளர்” பட்டம், ஆசியான் சிறந்த வணிக விருது 2019 மற்றும் “கச்சேரி பொழுதுபோக்கிற்கான சிறந்த பிராண்ட்” என்ற BrandLaureate-SMEs BESTBRANDS 2011 ஆண்டிற்கான விருதையும் பெற்றுள்ளது.

Exit mobile version