உலு சிலாங்கூர், மே 2-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்கள் குறிப்பாக சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவு ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் பக்கம்தான் இருக்கிறது என்று ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரான ஜசெகவைச் சேர்ந்த பாங் சோக் தாவ்விற்கு கடந்த சில நாட்களாக உள்ளூர் வாக்காளர்களிடமிருந்து நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
“நம் வேட்பாளரை அவர்கள் பெரிதும் வரவேற்று நட்புடன் பழகுகின்றனர். நான் பார்த்ததில் இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்று கோல குபு பாரு பட்டணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
-பெரித்தா ஹாரியான்

