Site icon அநேகன்

இந்தியர்களை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை! -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா, மே 2-

இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருப்பது அரசாங்கம் அவர்களைப் புறக்கணிக்கவில்லை என்பதையே புலப்படுத்துவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சமூகத்தில் எந்த தரப்பினரையும் புறக்கணிக்காமல் உதவுவதற்கு அரசாங்கம் அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

“பூமிபுத்ராக்களுக்கு உதவும் அணுகுமுறைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் வழி மலாய்க்காரர்களுக்கு உதவி செய்தால் பிற இனத்தவர் ஒதுக்கப்படுவார்கள் என்று பொருள்படாது” என்றார்.

“அதனால் பூமிபுத்ரா திட்டங்கள் மீது இந்தியர்கள் பொறாமை அல்லது கோபப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் ” என்றார்.

அதற்கு நாம் தீர்வு காணலாம். இப்போதுதான் முதன்முறையாக நிறைய பிரச்சனைகளுக்கு உள்துறை அமைச்சு தீர்வு கண்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய போது நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

Exit mobile version