Site icon அநேகன்

கோல குபு பாரு பெரிய மருத்துவமனையில் நிரந்தர மருத்துவ நிபுணர்கள் -டாக்டர் ஸுல்கிப்ளி

உலு சிலாங்கூர், மே 2-

கோல குபு பாரு பெரிய மருத்துவமனையில் சில மருத்துவ நிபுணர்களைப் பணியில் அமர்த்தப்படுவது உட்பட சுகாதார வசதிகளைச் சுகாதார அமைச்சு அதிகரித்திருப்பதாக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை செலாயாங் பெரிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலிருந்து மாதத்திற்கு 1 அல்லது 2 முறை  அமைச்சு அனுப்பி வைத்தது.

அந்த வகையில் கோல குபு பாருவில் வசிக்கும் மருத்துவ நிபுணரையும் நாம் கொண்டுள்ளோம். அவர் ஒரு நிரந்தர மருத்துவராவார். இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது மக்கள் கோரியது மருத்துவமனை மட்டுமல்ல, மாறாக இங்கு சுகாதார சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் ஆகும் என்று இங்குள்ள கம்போங் துன் அப்துல் ரசாக் பூர்வக்குடி மக்கள் பொது மண்டபத்தில் நடைபெற்ற சுகாதார பரிசோதனை நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version