பெட்டாலிங் ஜெயா, மே 3-
தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பது மக்களுக்குப் பாதகத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரைத் தேர்வு செய்வதன் மூலம் மட்டுமே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று ஜசெக தலைவர் லிம் குவான் வலியுறுத்தினார்.
“கோபத்தை வெளிக்காட்டுவதால் உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தீர்க்கப்படாத பிரச்சனைகளும் இருக்கவே செய்கின்றன. உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமென்றால் எதிர்கட்சியினர் பேசுவதைச் சற்றும் பொருட்படுத்தாதீர்கள்” என்றார் லிம்.
“பக்காத்தான் வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களை நாங்கள் காப்பாற்றுவதோடு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்போம்” என்று ராசா, சுவாங் பொது மண்டபத்தில் இந்திய வாக்காளர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய போது முன்னாள் நிதியமைச்சருமான குவான் எங் குறிப்பிட்டார்.
-எஃப்.எம்.டி.

