உலு சிலாங்கூர், மே 4-
தமது தேர்தல் கொள்கை அறிக்கை கோல குபு பாரு மக்களின் கருத்துகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும் என்று வேட்பாளர் பாங் சோக் தாவோ தெரிவித்தார்.
அம்பாங்கில் பிறந்தவரான பாவோ, (வயது 31) “இது மக்கள் திட்டத்திற்கான முயற்சிக்கேற்ப இருப்பதோடு கோல குபு பாரு மக்களின் தேவைகளைச் செவிமடுத்துத் தயாரிக்கப்பட்டதாகும்” என்றார்.
இந்த தேர்தல் கொள்கை அறிக்கை இதுநாள் வரை நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோல குபு பாரு மக்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாகும்.
“அதோடு மட்டுமின்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான சலுகைகள் என்னுடைய மற்றும் பக்காத்தான் தேர்தல் பணிக்குழுவின் ஆய்வு அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்” என்றார்.
“இதற்கு முன்பு நான் குறிப்பிட்டதைப் போல் என்னுடைய கவனம் ஓரிட மக்கள் குறிப்பாக இளைஞர்களின் மீது இருக்கும்” என்று பண்டார் உத்தாமா பத்தாங் காலியில் பெரியளவிலான தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பாங் குறிப்பிட்டார்.
-சினார் ஹாரியான்

