Site icon அநேகன்

கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு 17 இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆதரவு

கோல குபு பாரு, மே 4-

வரும் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவோவுக்கு ஆதரவளிப்பதாக இத்தொகுதியில் உள்ள 17 இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் தெரிவித்துள்ளன.

இவற்றில் கோல குபு பாரு இந்து சங்கம், உலு சிலாங்கூர் சமூகநல இயக்கம், தாமான் முசாபிகா குடியிருப்பாளர்கள் சங்கம், உலு பெர்ணம் கலை மற்றும் பண்பாட்டு இயக்கம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (4ஆவது மைல், சுங்கை ஜெர்னே தோட்டம்),  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (5ஆவது மைல், கோல கெர்லிங்), உலு சிலாங்கூர் மாவட்ட சமூக மற்றும் சமூகநல இயக்கம், உலு சிலாங்கூர் ஒற்றுமை சங்கம்,  உலு சிலாங்கூர் சினாரான் சூரியா இளைஞர் சங்கம், பிகேபி கால்பந்து சங்கம், பெல்டா கெடாங்சா இந்திய சமூக மேம்பாட்டுச் சங்கம், தேசிய மன வளர்ச்சி சங்கம், கோல குபு பாரு சிவானந்தா ஆன்மீக வாழ்க்கைச் சங்கம்  ஆகியவை அடங்கும்.

இந்த கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்தேர்தலில் பாங்கை எதிர்த்து கைருல் அஸாரி சாஉட் (பெரிக்காத்தான்), ஹாஃபிஸா ஸைனுடின் (மலேசிய மக்கள் கட்சி), ஞாவ் கீ ஸின் (சுயேட்சை) ஆகியோர் போட்டியிடுன்றனர்.

-பெர்னாமா

Exit mobile version