Site icon அநேகன்

எஸ்.பி.கே. குழுமத்தின் சுகாதார விழிப்புணர்வு முகாம்! -300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோல குபு பாரு, மே 5-

கோல குபு பாரு சுற்று வட்டார மக்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையிலான எஸ்.பி.கே. குழுமம் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று வெற்றிகரமாக நடத்தியது.

காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.

இது ஆண்டுதோறும் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்றும் தங்கள் உடல் நலம் குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கும் என்றும் இங்குள்ள சீனப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

இதில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கியது இதன் அவசியத்தை இவர்கள் நன்கு உணர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.

மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம், தேசிய ரத்த வங்கி ஆகியவற்றோடு பல அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குத் தோள் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

அதிர்ஷ்ட குலுக்கு, முதலில் வந்தவர்களுக்கு பரிசுகள் போன்ற அங்கங்கள் வருகை புரிந்தவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் கோல குபு பாரு பக்காத்தான் வேட்பாளர் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Exit mobile version