கோல குபுபாரு, மே 10-
நாளை நடைபெறவிருக்கும் கோல குபுபாரு இடைத்தேர்தலையொட்டி ஜசெக பிரசார நடவடிக்கைகளில் முழு வீச்சாய் ஈடுபட்டதாக இக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
இத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்காளர்களின் மதிப்பீட்டைப் பொறுத்தது என்றார் அந்தோணி லோக்.
இந்த இடைத்தேர்தலில் இத்தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சிரம்பான் பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இத்தேர்தலையொட்டி கட்சியின் கேந்திரம் இயன்ற அளவிலான பிரசார பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“பிரசார நடவடிக்கையின் இறுதி நாளான இன்று கூட நாங்கள் கடும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டோம். எங்களால் முடிந்தவற்றை நாங்கள் மேற்கொண்டோம். மதிப்பீடு செய்வது வாக்காளர்களைப் பொறுத்தது” என்று இங்கு பள்ளி மண்டபத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

