கோலாலம்பூர், மே 23-
தனக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் தான் சந்திக்கவிருப்பதாக
உலு சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.
தொழிலதிபரும் பத்திரிகை உரிமையாளருமான ஒருவர் தனக்கு எதிராக அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருவதாக சத்திய பிரகாஷ் கூறினார்.
தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என அவர் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அதை பற்றி பேச நான் விரும்பவில்லை என்றார் சத்திய பிரகாஷ்.
அதே வேளையில், தன்னை குறி வைத்து சம்பந்தப்பட்டவரின் பத்திரிக்கையில் தொடர்ந்து அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து நான் போலீசில் புகார் செய்துள்ளேன். விரைவில் வழக்கும் தொடரப்படும்.
என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறேன்.
“மற்றவர்களை போல் போலீஸ் நிலையம், நீதிமன்றம் சென்று வரும் வழக்கம் எனக்கில்லை” என்று அவர் மேலும் சொன்னார்.

