Site icon அநேகன்

பேறு குறைந்த ஈஸ்வரிக்கு சிலாங்கூர் மைபிபிபி மடிக்கணினி அன்பளிப்பு!

ரவாங் மே 23-

பேறு குறைந்த ஈஸ்வரி பிள்ளைக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் மடிக்கணினியை அன்பளிப்பாக வழங்கினார்.

புக்கிட் புருந்தோங்கைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இந்த மடிக்கணினி மூலம் இயங்கலை வழி கல்வி கற்பித்தல், தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு வருமான வரி கணக்குகளை செய்து கொடுத்தல், பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கணினி பயன்படுத்துவதற்கான அடிப்படை கல்வி கற்பித்தல் போன்ற நடவடிக்கைகளை இவர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இவற்றின் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்ற திடமான நம்பிக்கையை இவர் கொண்டுள்ளார்.

விடாமுயற்சி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனை, தன்னம்பிக்கை போன்ற நேர்மறை பண்புகள் வாயிலாக வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வேண்டும் என்பது இவரது லட்சியம் ஆகும்.

தனது தேவைகளை அறிந்து தக்க நேரத்தில் தனக்கு மடிக்கணினியை வழங்கி பேருதவி புரிந்த டாக்டர் சுரேந்திரனுக்கு ஈஸ்வரி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version