Site icon அநேகன்

ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழக துணை வேந்தரானார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்!

சுங்கைப்பட்டாணி, மே 25-

இங்குள்ள ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் 15வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.

நினைவில் வாழும் துன் சாமிவேலுவின் சிலை ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழக முன் வளாகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

இந்த வரலாற்று பூர்வ நிகழ்வுக்குப் பின்னர் இப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவாக 2024 பட்டமளிப்பு தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

அதே நேரத்தில், டத்தோஸ்ரீ சரவணன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது இப்பல்கலைக்கழகத்திற்கு மேலும் பெருமையைச் சேர்த்துள்ளது.

Exit mobile version