Site icon அநேகன்

உலகம் குறும்படப் போட்டி! -வெ.10,000 ரொக்கப் பரிசை வென்று டெலிமூவி தயாரிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்!

கோலாலம்பூர் மே 27-

‘உலகம் குறும்படப் போட்டியைப்’ பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

• ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ உலகம் இணைந்து நடத்தும் உலகம் குறும்படப் போட்டி தீபாவளி கருப்பொருளுடன் மீண்டும் வந்துவிட்டது. அற்புதமான ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் ஒரு டெலிமூவியைத் தயாரிக்கும் வாய்ப்பையும் பெற ஆர்வமுள்ள மலேசிய இயக்குநர்கள் இப்போதிலிருந்து ஜூலை 15 வரை தங்களின் ஆக்கப்பூர்வமான படைப்புகளைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

• பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:-

o தீபாவளி கருப்பொருளைக் கொண்ட அசல் 20-நிமிட தமிழ் குறும்படத்தைத் தயாரிக்க வேண்டும்.
o அவர்களின் குறும்படத்திற்கான போஸ்டரையும் தயாரிக்க வேண்டும்.
o மேலும் www.astroulagam.com.my/shortfilmcontest என்ற அகப்பக்கத்தின் வாயிலாக பங்கேற்ப்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து குறும்படம் மற்றும் போஸ்டரை அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
• போட்டியின் பத்து வெற்றியாளர்கள் பின்வரும் விதிகளின் அடிப்படையில் நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர்: அசல் தன்மைப், படைப்பாற்றல், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் மற்றும் திரைக்கதை.
• வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:
o முதல் நிலை வெற்றியாளர்: வெ.10,000 ரொக்கப் பரிசு மற்றும் ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அரிய வாய்ப்பு.
o இரண்டாம் நிலை வெற்றியாளர்: வெ.8,000 ரொக்கப் பரிசு.
o மூன்றாம் நிலை வெற்றியாளர்: வெ.6,000 ரொக்கப் பரிசு.
o ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள்: ஒவ்வொருவருக்கும் தலா வெ.3,000 ரொக்கப் பரிசுகள்.
• மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Exit mobile version