பலாக்கோங், மே 31-
பலாக்கோங் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி அவர்களின் நிறைவேற்றினார்.
வேர்ல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து பலாக்கோங் சட்டமன்ற அலுவலகம் இந்தச் சேவையை மேற்கொண்டது.
இங்குள்ள தாமான் கஸ்தூரியில் உள்ள பலாக்கோங் சட்டமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதியவர்களோடு சிறார்களும் உதவித்தொகையுடன் கூடிய மூக்குக் கண்ணாடிகளை ஓங் சுன் வெய்யிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

