ஷா ஆலாம், ஜூன் 15-
அண்மையில் நடைபெற்ற சிலாங்கூர் சுல்தானின் 78ஆவது பிறந்த நாளையொட்டி செலாயாங் நகராண்மைக் கழகத்தில் துணை அமலாக்க அதிகாரியாகப் பணிபுரியும் பரமசிவம் செல்லையா பிபிசி எனும் விருதைப் பெற்றார்.
மாநில சுல்தானின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விருதளிப்பு விழாவில் பரமசிவம் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் பரமசிவம் பிபிசி எனப்படும் ‘பிங்ஙாட் பெர்ஹிட்மாத்தான் செமெர்லாங்’ எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

