Site icon அநேகன்

எம்.ஜி.ஆர் ரகுவின் சிகிச்சைக்கு அரவிந்த் அப்பளசாமி வெ.10,000 நிதியுதவி!

கோலாலம்பூர் ஜூன் 17-

இரு கால்களையும் இழந்த கலைஞர் ரகுவுக்கு மின்கலத்தில் இயங்கும் சங்கர நாற்காலியை வாங்குவதற்காக நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு தாய் மக்கள் எம்ஜிஆர் கலைக் குடும்பம் ஏற்பாட்டில் தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி கலைஞர் ரகுவின் சிகிச்சைக்காக பத்தாயிரம் வெள்ளி அன்பளிப்பு செய்தார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலைஞர் ரகுவிற்கு மின்கலத்தினால் இயங்கும் சக்கர நாற்காலியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் வெங்கடேசன் பிள்ளை, தொழிலதிபர் மனோ,சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், டத்தோஸ்ரீ முத்து ரத்தினம், டத்தோ கலைவாணர் உட்பட பல நல்லுள்ளம் படைத்தவர்கள் இவருக்கு ஆதரவு வழங்கினர்.

அறிவிப்பாளர் ஜெயசீலனின் விறுவிறுப்பான அறிவிப்பில் மலர்ந்த இக்கலை நிகழ்ச்சியில் டாக்டர் புருஷோத்தமன் இசை மேற்பார்வை யாளராக திறம்பட தனது பணியை மேற்கொண்டார்.

தழல் வீராவின் அழகிய காட்சி அமைப்பில் பாடகர்களும் நடன கலைஞர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

பாடகர் சித்திரனின் ஆடி வா ஆடி வா பாடலோடு தொடங்கப்பட்ட இந்த இன்னிசை இந்நிகழ்ச்சியில் நளினா, விஜய், அன்பழகன், ஜெகதீஷ், டாக்டர் ஹரிச்சந்திரன், டத்தோ கலைவாணர், நவீன் ஆகியோரின் பாடல்கள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

அதே வேளையில், இடம்பெற்ற பாடல்களுக்கு எம்ஜிஆர் விஜய் சேகர், எம்ஜிஆர் சேகர், எம்ஜிஆர் குணா, ஆனந்தகுமார், ரவிச்சந்திரன், ஜெகதீஷ் குமார்,நாகேஷ் மூசா, சாந்தி, அன்புச்செல்வி, உஷா, மாலா ஸ்ரீ, லதா போன்ற கலைஞர்களின் அபிநயம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஜிலு, ஜிலு, காவேரி கரை இருக்கு, தேன் சொட்ட சொட்ட, தொட்டதோ தொடாததோ, காற்று வந்தால் தலை சாயும், ஒரு பெண்ணைப் பார்த்து, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், நீல நிறம், உள்ளத்தில் நூறு நினைத்தேன் போன்றவை இவர்கள் அபிநயம் வழங்கிய இனிய பாடல்களில் அடங்கும்.

எம்ஜிஆர் விஜய் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலைஞர்கள், ரசிகர்கள் என திரளானோர் கலந்து கொண்டு கலைஞர் ரகுவிற்கு ஆதரவு கரம் நல்கினர்.

Exit mobile version