கோலாலம்பூர், ஜூன் 18-
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தலைநகர், ஜாலான் ஈப்போவிலுள்ள செட்டியார் மண்டபத்தில் கண்ணதாசன் விழா 2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழா வரும் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில் இவ்விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் “கண்ணதாசன் பாடல்களில் சைவ சித்தாந்தம்” என்ற தலைப்பில் டத்தோ டாக்டர் வ.கதிரேசன், “பாட்டுடைத் தலைவன்” என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் தேவிலட்சுமி, “ஊர் நெடுக என் பாடல்” என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபின் மைந்தன் முத்தையா, “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை” என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.
இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

