Site icon அநேகன்

ஆக.18 இல் மைபிபிபி தேசிய பேராளர் மாநாடு!

கோலாலம்பூர் ஜூன் 23-

நாட்டின் பழைய வாய்ந்த மைபிபிபி கட்சியின் 71 ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைபெறும் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

1,200 பேராளர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் கட்சியின் சட்ட விதிகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று லோக பாலா குறிப்பிட்டார்.

தலைவரின் தவணைக் காலம், கட்சியின் சின்னம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த சட்ட விதி திருத்தங்களில் அடங்கும் என்றார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கும் விடுக்கபட்டுள்ளதாக இங்கு நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை இந்த மாநாட்டில் பேராளர்கள் முடிவு செய்வார்கள் என்பதையும் அவர் கோடி காட்டினார்.

Exit mobile version