Site icon அநேகன்

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ரம்லான் ஹருண் நியமனம்!

புத்ராஜெயா, ஜூன் 26-

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவரது நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அனுமதி வழங்கியதாக தேசிய தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி தெரிவித்தார்.

இந்நியமனம் கூட்டரசு அரசியமைப்பு சட்டம், 114ஆவது விதிக்கேற்ப செய்யப்பட்டதாகும் என்று செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி குறிப்பிட்டார்.

ரம்லான் 25 ஆண்டுகளாகப் பொதுச்சேவைத் துறையில் பணியாற்றியதோடு சில அமைச்சுகள் மற்றும் மாநில அரசாங்க நிலையிலும் சில பதவிகளில் இதற்கு முன்பு பொறுப்பு வகித்துள்ளார்.

-எப்.எம்.டி.

Exit mobile version