Site icon அநேகன்

எஸ்பிஎம் எழுதாத 399 பேர் மீண்டும் தேர்வு எழுத கட்டாயப்படுத்தப்பட்டனர்! -துணை அமைச்சர் வொங் கா வோ

கோலாலம்பூர், ஜூன் 26-

2023ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வுக்குப் பதிந்த10,160 பேரில் தேர்வு எழுதாத 399 பேர் மீண்டும் தேர்வில் அமரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்கள், பள்ளிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கல்வி துணையமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.

அந்த வகையில் தேர்வில் அமராத 399 பேரை அமைச்சு மீண்டும் தேர்வு எழுத வகை செய்து விட்டதாக எஸ்பிஎம் தேர்வு எழுதாதவர்களின் பிரச்சனையைத் தீர்க்கக் கல்வி அமைச்சு மேற்கொண்ட அணுகுமுறைகள் குறித்து மக்களவையில் கூலிம் பண்டார் பாரு-பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸ்லான் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு வொங் பதிலளித்தார்.

-எப்.எம்.டி.

Exit mobile version