Site icon அநேகன்

இணைய தள சேவைகளின் இடையூறுகளை அடையாளம் காண்பீர்! -பேங்க் நெகாரா உத்தரவு

கோலாலம்பூர், ஜூன் 26-

நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அண்மைய இணைய தள சேவை இடையூறுகளைக் கடுமையான ஒன்றாகக் கருதுவதால் அதற்கான முக்கிய காரணத்தைக் கண்டறியும்படி பேங்க் நெகாரா உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த பொருத்தமான தடுப்பு மற்றும் சீர்திருத்த முறைகளை நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் வங்கி தரப்பினர் தொடர்பு கொண்டு இந்த இடையூறுகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் புகார்களுக்கு பதிலளிப்பதும் அடங்கும்.

அதோடு இந்த நிதி நிறுவனங்கள் கூடிய விரைவில் செயல்பட்டு அவற்றின் சேவைகள் சீரமைக்கப்படுவதை உறுதிப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை பேங்க் நெகாரா மேற்கொள்ளும் என்று மக்களவையில் கேள்வி-பதில் அங்கத்தில் இணைய தள வங்கிச் சேவைகளில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து மற்றும் பயனீட்டாளர்களுக்குச் சிரமம் ஏற்படும் அளவுக்கு அடிக்கடி தடங்கலாகும் வங்கிச் சேவைகளின் அடைவுநிலைக்கு அபராதம் விதிப்பதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை குறித்து மக்களவையில் ஆயர் ஈத்தாம்-தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ காசி யோங் எழுப்பிய கேள்விக்கு லிம் இவ்வாறு பதிலளித்தார்.

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version