ஷா ஆலாம், ஜூன் 27-
சுற்றுச்சூழல் விவகாரத்தைப் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக அதுகுறித்த கலந்துரையாடலில் நிபுணத்துவம், சமயம், கருத்து வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்திற்கு ஒரு தரப்பால் மட்டும் தீர்வு கண்டு விட முடியாது, காரணம் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த விழிப்புணர்வு இதற்குத் தேவைப்படுகிறது என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பதன் அவசியம் குறித்து மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விவாதிப்பதால் அந்த அணுகுமுறையை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
“என்னைப் பொறுத்தவரை மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் மேற்கொள்ளும் இந்த அணுகுமுறை குறித்த கலந்துரையாடலை சமய கோணத்தில் வைத்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என நிலையான பசுமை வளர்ச்சிக்கான அனைத்துலக இஸ்லாமிய மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் நஸ்மி இவ்வாறு குறிப்பிட்டார்.
-பெர்னாமா

