கோலாலம்பூர், ஜுன் 27-
சேவை தடைபடும் அளவுக்கு தொடர்பு கம்பிகளைத் திருடும் நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குறிப்பிட்ட சட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு குற்றவியல் சட்டத்தின் கீழ் காணப்படும் சில அதிகாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என்று தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறினார்.
“அதே வேளையில், இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில் மற்ற மாநிலங்களில் நிலவும் கம்பி திருட்டு சம்பவங்கள் அல்லது பொது சொத்துக்களை நாசமாக்கும் வேலை தொடர்பில் ஒருங்கிணைந்த கருத்துக்கள் பெறப்படும் “என்றார் அவர்.
தலைநகர் டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா மண்டபத்தில் நிகழ்ச்சியைக் கண்டு களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

