புத்ராஜெயா, ஜூன் 29-
தம் வசம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு எதிராக மதுபான பணியாளர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள நீதிமன்றம் 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது காரில் கஞ்சா வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் இவர் மீது 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட பி. பவித்திரனுக்கு, (வயது 27) 17 ஆண்டு சிறை தண்டனை உட்பட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10 பிரம்படிகள் விதிக்க சபா சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி தலைமையேற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழு உத்தரவிட்டது.
இக்குற்றத்தைப் புரிந்த போது அவருக்கு 20 வயது 7 மாதமே என்பதால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 288ஆம் பிரிவின் கீழ் கூடியபட்சம் 24 பிரம்படிகள் வழங்க அனுமதிக்கப்பட்டது.
இந்த சிறைத் தண்டனை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக ஹாஸ்னா ஹஷிம், வாஸிர் ஆலாம் மைடின் மீரா ஆகிய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

