கோலாலம்பூர், ஜூன் 28-
கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, குவாந்தான் பேருந்து மற்றும் ரயில் உட்பட ரேபிட் பஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் திறந்த கட்டண முறையை அமல்படுத்த பிராசாரானா திட்டமிட்டு வருகிறது.
இந்த மேம்பாட்டு முறை 2024 தொடங்கி 2026ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இது செயல்படுத்தப்பட்ட பின்னர் டச் என் கோ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்த முடியும் என்று தற்போது பினாங்கு ரேபிட் பேருந்தில் கட்டணம் செலுத்த ரொக்கத்தைத் தவிர டச் என் கோ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்த முடியுமா என்று மக்களவையில் பாயான் பாரு-பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி ஸின் எழுப்பிய கேள்விக்கு அந்தோணி இவ்வாறு பதிலளித்தார்.
-பெரித்தா ஹாரியான்

