Site icon அநேகன்

பிரதமரை சந்தித்தார் உலக நாயகன் கமல்ஹாசன்!

கோலாலம்பூர், ஜூன் 29-

‘இந்தியன் 2’ திரைப்படத்தை மலேசியாவில் பிரபலப்படுத்துவதற்காக வருகை மேற்கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று சந்தித்துப் பேசினார்

“எனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கிடையில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞருடன் சந்திப்பு நடத்துவதற்காக நேரத்தை ஒதுக்கினேன்” என்றார் பிரதமர்.

“இந்த 30 நிமிட சந்திப்பில் திரைப்பட துறை உட்பட ஊழலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம் ” என்று தமது முகநூலில் நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.

-பெர்னாமா

Exit mobile version