Site icon அநேகன்

சாலை விபத்துகளால் கடந்தாண்டு வெ.25 பில்லியன் இழப்பு! -அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஜூலை 11-

சாலை விபத்துகளால் நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.4 விழுக்காடு அல்லது 25 பில்லியன் வெள்ளிக்கும் மேலான இழப்பை நாடு எதிர்நோக்கியது.

முந்தைய ஆண்டில் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் இது அதிகமாகும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

தேசிய போலீஸ் படை வெளியிட்ட சாலை விபத்து புள்ளி விவர அறிக்கை மற்றும் அனைத்துலக சாலை மதிப்பீட்டுத் திட்டத்தின் வழி கடந்த 2010ஆம் ஆண்டில் 18 பில்லியன் வெள்ளி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 விழுக்காடு) இழப்பை நாடு எதிர்நோக்கியது.

மக்களவையில் சாலை விபத்துகளால் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் எதிர்நோக்கும் இழப்பு மற்றும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட பயனுள்ள அணுகுமுறைகள் குறித்து பாங் ஹோக் லியோங் (லாபிஸ்-பக்காத்தான்) எழுப்பிய கேள்விக்கான எழுத்துப்பூர்வ பதிலில் அந்தோணி லோக் இவ்வாறு குறிப்பிட்டார்.

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version