Site icon அநேகன்

எஸ்பிஎம் தேர்வு: சிறப்பு தேர்ச்சி பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை! டத்தோ ரமணன் வழங்கினார்

சுங்கை பூலோ, ஜூலை 13-

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற இவ்வட்டாரத்தைச் சேர்ந்த 159 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.

இத்தொகையை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினார்.

இத்தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஊக்குவிப்பு தொகை வழங்கப்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு, பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஊக்குவிப்பு தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

எஸ்பிஎம் தேர்வில் 7 ஏக்களுக்கும் மேல் பெற்ற 159 மாணவர்கள் இந்த ஊக்குவிப்பு தொகையைப் பெற்றனர்.

இவர்களுக்காக சுமார் 72,350 வெள்ளி செலவிடப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“அவ்வகையில் இன்றைய நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த பேங்க் ரக்யாட் அறவாரியத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ரமணன்.

மற்ற நிறுவனங்களும் மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ஷம்ரி சாலே, தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version