Site icon அநேகன்

எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வாய்ப்பு!

கிள்ளான், ஜூலை 14-

எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் அமராத மாணவர்கள் அரசாங்க கல்லூரிகளில்  மேற்கல்வி தொடர்வதற்கான  பதிவு மற்றும் வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

இந்நடவடிக்கை   இம்மாதம் 20ஆம் தேதி  காலை மணி 9 .00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை  கிள்ளான், எம்.பி.டி.கே.  செந்தோசா  சமூக மண்டபத்தில் நடைபெறும்.

ஐஎல்பி, ஐபிகேஎன், சமூக கல்லூரி, எஸ்டிடிசி, இளைஞர் கோல்ஃப் கல்லூரி உட்பட பல கல்லூரிகள் இம்மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளன.

தகுதியான மாணவர்களுக்கு அன்றைய தினமே கல்லூரியில் சேர்வதற்கான கடிதங்கள்  வழங்கப்படும்.

படிப்பில் பின் தங்கியவர்கள் சிறந்த எதிர்காலத்தைப் பெறும்  வகையில் இவர்களுக்கு கல்லூரி  விரிவுரையாளர்களால் தக்க ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்த வாய்ப்பை நன்கு  பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய மாணவர்களை  செந்தோசா சட்டமன்ற    தொகுதியின்  கல்வி பிரிவு  பொறுப்பாளர் டாக்டர் உமாதேவி கேட்டுக் கொண்டார்.

https://bit.ly/JomKolejKerajaan வழி உடனடியாகப் பதிவு செய்யும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

Exit mobile version