கோலாலம்பூர், ஜூலை 16-
இலக்கிய சொற்பொழிவுகள், இன்னிசை விழா, கவியரங்கம் என பல நிகழ்வுகளை உள்ளடக்கிய கிறிஸ்தவக் கலை இலக்கிய சங்கத்தின் ” இயேசு காவியம் விழா” மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .
இவ்விழா இங்குள்ள விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ சோமா அரங்கில் இம்மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும்.
மஇகா தேசிய துணைத் தலைவரும் மலேசிய கண்ணதாசன் அற வாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இவ்விழாவிற்கு சிறப்பு வருகை புரிகிறார்.
தமிழுக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவை பறைசாற்றும் நோக்கத்தோடு நடைபெறவிருக்கிறது கவியரசு கண்ணதாசனின் “ இயேசு காவியம் விழா” .
இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொள்ளும்படி இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.

