கிள்ளான், ஜூலை 17-
எஸ். பி. எம். சோதனையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு நேரடியாக கல்லூரியில் சேர்வதற்கான கடிதங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நேர்காணல் இம்மாதம் 20ஆம் தேதி காலை மணி 9 .00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை தாமான் செந்தோசா, எம்.பி.கே. மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் ஐஎல்பி, ஐபிகேஎன், சமூக கல்லூரி, எஸ்டிடிசி, இளைஞர் கோல்ஃப் கல்லூரி உட்பட 9 கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டியையும் வழங்குவர் என்றார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.
தகுதியான மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான கடிதங்கள் அன்றைய தினமே வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் https://bit.ly/JomKolejKerajaan வாயிலாக பதிவு செய்யும்படி அவர் ஆலோசனை கூறினார்.

