கோலாலம்பூர், ஜூலை 17-
பாதிக்கப்பட்டவரை மரணத்திற்கு இட்டுச் சென்ற பகடி வதை சம்பவத்தைப் புரிந்தவருக்கு தண்டனை வெறும் 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பது குறித்து தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃ பாட்சில் அதிருப்தி தெரிவித்தார்.
இணைய பகடி வதையால் உயிரிழந்த “இஷா என்ற ராஜேஸ்வரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இணைய பகடி வதைக்கு பெண் ஒருவருக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது” என்றார் அமைச்சர்.
“இஷா என்ற ராஜேஸ்வரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இணைய பகடி வதைக்கு பெண் ஒருவருக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது” என்றார் அமைச்சர்.
இந்த இணைய பகடி வதை சம்பவத்தில் ஈடுபட்டதாக 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் செயல்கள் 14 ஆவது சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ‘அல்பா குயின்’ என்ற பி. ஷாலினிக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி என மிகக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.
“எனினும், இந்த தண்டனை ஆதாரத்தின் அடிப்படையிலானது என்ற சட்டத்துறை அலுவலகத்தின் கூற்றைப் புரிந்து கொண்டேன்” என்றார் ஃபாமி ஃ பாட்சில்.

