Site icon அநேகன்

பகடி வதை குற்றத்திற்கு குறைந்த தண்டனை:சட்டத்தில் உடனடி திருத்தம் தேவை! ரஜீவ் ரிஷாகரன்

புக்கிட் காசிங், ஜூலை 17-

இஷா என்ற ராஜேஸ்வரி மரணத்தைத் தழுவும் அளவுக்கு  இணைய பகடி வதையில் ஈடுபட்ட பெண்ணுக்கு தண்டனையாக 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பட்டியலில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷாகரனும் இடம் பெற்றுள்ளார். 

இத்தகு கடுமையான குற்றச்சாட்டுக்கு மிகவும் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. 

இதற்கு நடப்பு சட்டத்தில் உடனடி மாற்றங்கள் செய்யப்பட  வேண்டும் வேண்டும் என்று  அறிக்கை ஒன்றின் வழி ரஜீவ் வலியுறுத்தினார். 

“பாதிக்கப்பட்டவரை மரணத்திற்கு இட்டுச் சென்ற பகடி வதை சம்பவத்தைப் புரிந்தவருக்கு தண்டனை வெறும் 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல” என்றார். 

 இந்த இணைய  பகடி வதை  சம்பவத்தில் ஈடுபட்டதாக 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் செயல்கள் 14 ஆவது   சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ‘அல்பா குயின்’ என்ற பி. ஷாலினிக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி விதிக்கப்பட்டிருப்பது மிகவும் குறைவான தண்டனையாகும்  என்று ரஜீவ் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

Exit mobile version