Site icon அநேகன்

ஆறு வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்:தடுப்புக்காவலில் 3சந்தேகப் பேர்வழிகள்!

ஜோகூர் பாரு, ஜூலை 23-

பேரங்காடி ஒன்றில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மூன்று சந்தேகப் பேர்வழிகள் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 28க்கும் 55க்கும் இடைப்பட்ட வயதுடைய  இரண்டு ஆண்கள்  மற்றும் ஒரு பெண்ணான  இந்த மூவரையும்  இன்று தொடங்கி  ஜூலை 26 ஆம் தேதி வரை  தடுப்பு  காவலில்  வைக்கும்படி   மாஜிஸ்திரேட்    சுஹாய்லி சாப்புன்   உத்தரவிட்டார் . இம்மூவர் மீது  குற்றவியல் சட்டம்  பிரிவு 365 கீழ்  விசாரணை மேற்கொள்ளப்படும் .

 ஆரஞ்சு மற்றும்  ஊதா  நிற  தடுப்புக்காவல் உடை அணிந்திருந்த   இம்மூவரும்  போலீசாரின்  பாதுகாப்பின் கீழ்  காலை மணி 8.45க்கு  நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர் .

 இவர்கள்  கடந்த திங்கள்கிழமை  பிற்பகல் 1.30 அளவில்  கெலாங் பாத்தா, இஸ்கந்தர்  புத்ரி பகுதியில்  கைது செய்யப்பட்டனர் .

 ஆறு வயது சிறுமி  ஆல்பர்டின் லியோ  ஜியா   ஹூய்  கடந்த சனிக்கிழமை இரவு  8.30 மணியளவில்  இங்குள்ள ஸ்கந்தர் புத்ரி  இக்கோ கெலெரியா  பேரங்காடியில்   காணாமற்  போனதாகப் புகார் செய்யப்பட்டது.

-சினார் ஹரியான்

Exit mobile version