Site icon அநேகன்

2023 எஸ்டிபிஎம் தேர்வு முடிவு: 11 ஆண்டுகளில் சிறந்த பதிவு! 

செலாயாங், ஜூலை 23-

2023 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வின் தேசிய ஒட்டுமொத்த  சராசரி கிரேட் மதிப்பு (பிஎன்ஜிகே) 0.02 புள்ளிகளாக  அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 முந்தைய ஆண்டு  2.82 ஆக இருந்த பிஎன்ஜிகே கடந்தாண்டு   ம2.84ஆக உயர்வு கண்டிருப்பதாக  மலேசிய  தேர்வு மன்றத்தின்  தலைவர்  பேராசிரியர்   டத்தோ  டாக்டர்  முகமது  இக் வான்   தோரிமான்  குறிப்பிட்டார் .

  எஸ்டிபிஎம்  மதிப்பீட்டு முறை  2013 ஆம்  ஆண்டில் அமல்படுத்தப்பட்ட 11   ஆண்டுகளில்  தேசிய  பிஎன்ஜிகேவின்  சாதனை  இதுவாகும்  என்றார்  அவர் .

“1,116 மாணவர்கள் அல்லது 2.70 விழுக்காட்டினர் பிஎன்ஜிகே 4.00 என முழு தேர்ச்சி நிலையைப் பெற்றனர். எனினும், 2022ஆம் ஆண்டு 1,184 ஆக இருந்த முழு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டு 1,116 ஆகக் குறைந்துள்ளது ” என்றார்.

“இந்த 1, 116 மாணவர்களில் 803 பேர் அல்லது 71.95 விழுக்காட்டினர் பி 40 பிரிவைச் சேர்ந்தவர்கள் ” என்று  இங்கு    பத்துமலை, பெர்சியாரான் சத்துவில்  அமைந்துள்ள  மலேசிய தேர்வு   மன்ற  பிரதான மண்டபத்தில்  எஸ்டிபிஎம் தேர்வு  முடிவுகளை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தபோது  குறிப்பிட்டார் .

Exit mobile version