Site icon அநேகன்

மதுபானம்,  சிகரெட் & சூதாட்ட  நிறுவனங்களிடமிருந்து  நன்கொடை பெற பள்ளிகளுக்கு  தடை !  –  மஇகா மகளிர் பிரிவு ஆதரவு

 கோலாலம்பூர், ஜூலை 24 –

   பள்ளிகளுக்கு மதுபானம்,  சிகரெட்  மற்றும் சூதாட்ட  நிறுவனங்கள்  நன்கொடை  வழங்குவதற்குத்  தடை விதிக்கப்பட வேண்டும்  என்ற  அம்னோ இளைஞர் பிரிவு தலைவர்  அக்மால்  சாலேயின்  கருத்துக்கு மஇகா மகளிர்  பிரிவின் தலைவி  சரஸ்வதி நல்லதம்பி  ஆதரவு தெரிவித்தார் .

பள்ளிகளுக்கான நன்கொடை  வழிகாட்டியில்  எந்தவொரு  விலக்களிப்பும்   வழங்கப்படமாட்டாது.  சிகரெட் மற்றும் மதுபான  நிறுவனங்களிடமிருந்து  நன்கொடை   பெறுவது மீதான வழிகாட்டியை மறு ஆய்வு செய்வது  அல்லது   விலக்களிப்பு வழங்கப்படுவதற்கு அறவே இடமில்லை என்று கல்வி அமைச்சர்  பாட்லினா சிடேக்  திட்டவட்டமாகக் கூறியுள்ளார் .

இதுபோன்ற நிறுவனங்களின் நன்கொடை  மாணவர்களின்  அறிவு மற்றும்  மன உணர்வுகளைப்  பாதிக்கும் என்பதால்  இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று  கல்வி அமைச்சு   கூறியிருந்தது . ஆகையால்  அமைச்சின் வழிகாட்டியை பள்ளிகள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று  கெமிலா சட்டமன்ற உறுப்பினருமான  சரஸ்வதி அறிக்கை ஒன்றின் வழி  வலியுறுத்தினார் .

இதன்  விதிமுறைகளில்  திருத்தங்கள் ஏற்படுத்தும்படி  சில தரப்பினர்   கூறினாலும் பள்ளிகளுக்கு மதுபானம்,  சிகரெட்  மற்றும் சூதாட்ட  நிறுவனங்கள்  நன்கொடை  வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் தொடர்ந்து   நிலைநிறுத்த  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .

Exit mobile version