Site icon அநேகன்

மதுபான  நிறுவனங்களிடமிருந்து பள்ளிகள் நன்கொடை பெற   தடை: முடிவை நிலை நிறுத்தும்படி  மஇகா இளைஞர் பிரிவு பணிப்படை வலியுறுத்து!

 கோலாலம்பூர், ஜூலை 24 –

   பள்ளிகளுக்கு மதுபானம்,  சிகரெட்  மற்றும் சூதாட்ட  நிறுவனங்கள்  நன்கொடை  வழங்குவதற்கு விதிக்கப்பட்ட   தடை நிலை நிறுத்தப்பட வேண்டும்  என்று  மஇகா   இளைஞர் பிரிவு பணிப்படை தலைவர் அண்ட்ரூ டேவிட் கேட்டுக் கொண்டார். 

 இந்த  விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும்  பின்பற்றுவதற்கு ஏதுவாக   இவற்றை  மேலும் கடுமையாக்க வேண்டுமென்று   அண்ட்ரூ  டேவிட்  வலியுறுத்தினார்.

சிகரெட் மற்றும் மதுபான  நிறுவனங்களிடமிருந்து   பள்ளிகள் நன்கொடை   பெறுவது மீதான வழிகாட்டி  மறு ஆய்வு  செய்யப்பட மாட்டாது   என்ற கல்வி   அமைச்சின் நிலைப்பாடு  நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார் .

“கல்வி அமைச்சின்  நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கின்றோம் . நடப்பு கொள்கையை எந்த ஒரு தரப்பினரும் மாற்ற முடியாது .  ஆகையால்  இந்த நடைமுறையை அமைச்சு   மேலும் கடுமையாக்க வேண்டும்”   என்றார் மஇகா  விளையாட்டு பிரிவு தலைவருமான அண்ட்ரூ  டேவிட்.

இந்த விவகாரத்தில்  பொதுமக்களும்  விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில்   நற்பண்புகளை விதைக்கும்  இடமாக  பள்ளிகள்  தொடர்ந்து விளங்க வேண்டும்  என்றார் .

Exit mobile version