Site icon அநேகன்

உப்சி முன்னாள் மாணவி நூர் ஃபாரா கொலை! போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

உலு சிலாங்கூர், ஜூலை 26-

 சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக (உப்சி) முன்னாள் மாணவி நூர் ஃபாரா ஜிகார்த்தினியைக் கொலை செய்ததாக லான்ஸ் காப்ரல்  முகமது அலிஃப் மொஞ்சானி  மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

 சிலிம் ரிவர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த முகமது அலிஃப்  ஜூலை   10ஆம் தேதி காலை மணி 9.00க்கும் ஜூலை 15ஆம் தேதி மாலை மணி 6.00க்கும் இடையே உலு பெர்ணம் கம்போங் ஸ்ரீ கெலெடாங் செம்பனை தோட்டத்தில் முகமது அலிஃப் (26) இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்  30 முதல் 40 ஆண்டு வரையிலான  சிறை  12க்கும்  குறையாக  பிரம்படிகள்  விதிக்க வகை செய்யும்  குற்றவியல் சட்டம்  பிரிவு 302இன் கீழ் இவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 

நூர் ஃபாரா கார்த்தினி (25)ஜூலை 10 ஆம் தேதி காணாமற் போனதாகப் புகார் செய்யப்பட்டது.

   இவ்வழக்கு   மீதான விசாரணை  வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி  நடைபெறும் என்று நீதிமன்றம் தேதி  நிர்ணயித்தது .

-பெரித்தா ஹரியான்

Exit mobile version