Site icon அநேகன்

நகைச்சுவை கலைஞர் சத்யாவிற்கு  பிரதமர் நிதியுதவி! 

 கோலாலம்பூர் ஜூலை 29 

 பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட  பிரபல நகைச்சுவை கலைஞர்  சத்யாவை  பிரதமரின் அரசியல் செயலாளர்   ஃபார்ஹான் ஃபாவ்சி   நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார் .

 “பீ மாய்  பீ மாய்   தாங் தூ”  உட்பட பல நகைச்சுவை   தொடர்கள்  வாயிலாக பல்லாயிரக்கணக்கான  ரசிகர்களைக்  கவர்ந்தவர் சத்யா .

 இவர் அண்மையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார் .

 இவர்  தொடர்  சிகிச்சை மேற்கொள்வதோடு  உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று  பிரதமர்  தமது முகநூலில் கேட்டுக் கொண்டார் .

 சத்யாவின்  மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக ஃபார்ஹான்  தமது சார்பாக  சத்யாவிடம் நிதியுதவி வழங்கியதாகவும்  பிரதமர்  கூறினார் .

  இச்சந்திப்பில் கெஅடிலான் வங்சா  மாஜூ டிவிஷன் தலைவர்  ஹென்றி லாயும்   உடன்  இருந்தார். 

Exit mobile version