Site icon அநேகன்

ஒற்றுமையோடு முன்னேறுவோம்! டத்தோஸ்ரீ ரமணனின் தீபாவளி வாழ்த்து!

கோலாலம்பூர், அக். 31-

நாட்டில் இந்திய சமூகத்தினர் முன்னேற்றம் காண ஒற்றுமை மிக அவசியம் என்று தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

“ஒற்றுமையே நமது பலம். ஆகையால் அனைவரும் ஒற்றுமையோடு இத்தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்” என்றார் ரமணன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மடானி அரசாங்கத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து சந்தோஷமாக இத்தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றார்.

அதே வேளையில், வாகனங்களைப் பயன்படுத்துவோர் மிக கவனமுடன் சாலையில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version